/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு தொகுதியில் 31 வேட்பாளர்; சின்னத்துடன் பட்டியல் 'ரிலீஸ்'
/
ஈரோடு தொகுதியில் 31 வேட்பாளர்; சின்னத்துடன் பட்டியல் 'ரிலீஸ்'
ஈரோடு தொகுதியில் 31 வேட்பாளர்; சின்னத்துடன் பட்டியல் 'ரிலீஸ்'
ஈரோடு தொகுதியில் 31 வேட்பாளர்; சின்னத்துடன் பட்டியல் 'ரிலீஸ்'
ADDED : ஏப் 01, 2024 04:04 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில், 31 வேட்பாளர்கள் விபரம், சின்னத்துடன் வெளியிடப்பட்டது.
ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட, 42 வேட்பாளர்கள், 52 மனுக்களை தாக்கல் செய்தனர். மனு ஏற்பின்போது, கூடுதல் மனுக்கள், முழு விபரம் தாக்கலாகாதது, வயது குறைவு, வாபஸ் போன்ற காரணத்தால், 37 வேட்பாளர்கள் தவிர மற்ற மனுக்கள் விலக்கப்பட்டது.
வேட்பு மனு வாபஸ் நாளான கடந்த, 30ல் 6 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர். இதன்படி, 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அவர்களது பெயர், அவர்கள் சார்ந்த கட்சி அல்லது சுயேட்சை விபரம், சின்னம் ஆகியவற்றை வெளியிட்டனர்.
இதன்படி ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், 1 வி.வி.பேட் பயன்படுத்தப்படும். முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 வேட்பாளர்களும், 2ம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 15 வரை வேட்பாளர்களும், 16ம் இடத்தில் நோட்டோவும் இருக்கும் வகையில் ஓட்டுச்சீட்டை தயார் செய்து வருகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி வேட்பாளர்கள்: அசோக்குமார்-அ.தி.மு.க.,- இரட்டை இலை; ப.ஈஸ்வரன்-பகுஜன் சமாஜ் கட்சி-யானை; கே.இ.பிரகாஷ்-தி.மு.க., - உதயசூரியன்; மு.கார்மேகன்-நாம் தமிழர் கட்சி-ஒலி வாங்கி;
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள்: பொ.குப்புசாமி உழைப்பாளி மக்கள் கட்சி- வாயு சிலிண்டர்; ரா.குமார்-அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்-தலைக்கவசம்; ரா.தண்டபாணி-வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி- சிறு உரலும் உலக்கையும்; பா.தர்மராஜ்-ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி-பலாப்பழம்; வ.தனலட்சமி-நாடாளும் மக்கள் கட்சி-ஆட்டோ ரிக்ஷா;
கு.மாதன்-இந்திய கணசங்கம்-வெண்டைக்காய்; அ.தி.முனுசாமி-சாமானிய மக்கள் நலக்கட்சி- மோதிரம்; பொ.விஜயகுமார்-த.மா.கா.,(மூப்பனார்)-மிதிவண்டி;
சுயேட்சைகள்: நா.அசோக்குமார்-குளிர் பதனப்பெட்டி; தா.வெ.ரா.அமிர்தலிங்கம்-கரும்பு விவசாயி; ஆறுமுகா ஏ.சி.கண்ணன்-திருகி; சீ.ஆனந்தி-பரிசு பெட்டகம்; மு.கீர்த்தனா- மடிக்கணினி; ர.குமரேசன்-பிரஷர் குக்கர்; ஜெ.கோபாலகிருஷ்ணன்-பானை; மா.சண்முகம்- தென்னந்தோப்பு; மு.சபரிநாதன்-தொலைபேசி; க.செந்தில்குமார்-சிலேட்டு; மா.நரேந்திரநாத்- தொலைக்காட்சி பெட்டி; பிரசாத் சிற்றரசு-ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை;
மு.பிரபாகரன்-சீர்வளி சாதனம்; க.மயில்சாமி-கப்பல்; த.மயில்வாகனன்-படகோட்டியுடன் கூடிய பாய்மரப்படகு; ஆர்.மின்னல் முருகேஷ்-தீப்பெட்டி; ல.ரவிச்சந்திரன்-வைரம்; ப.ராஜேந்திரன்- டீசல் பம்ப்; கே.கே.வடுகநாதன்-கணினி.

