/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2ஜி ஊழல்வாதி ராஜாவை தோற்கடிக்க வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு
/
2ஜி ஊழல்வாதி ராஜாவை தோற்கடிக்க வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு
2ஜி ஊழல்வாதி ராஜாவை தோற்கடிக்க வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு
2ஜி ஊழல்வாதி ராஜாவை தோற்கடிக்க வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு
ADDED : ஏப் 15, 2024 03:53 AM
புன்செய் புளியம்பட்டி: நீலகிரி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான முருகனை ஆதரித்து, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்ட சபை தொகுதி புன்செய்புளியம்பட்டி நகராட்சி பகுதியில், நடிகர் சரத்குமார் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். திறந்தவெளி வேனில் ஓட்டு சேகரித்து அவர் பேசியதாவது:
பிரதமர் மோடியை, 29 பைசா என அமைச்சர் உதயநிதி கூறுகிறார். ஆனால், 29 பைசா என்ன என்பதை அவர் கூறுவதில்லை.
மத்திய அரசுக்கு ஆறு லட்சத்து, 58 ஆயிரம் கோடியை வரியாக தமிழக அரசு அனுப்பினால், ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 145 கோடியை திருப்பி தருகிறது. அதற்கு தமிழக அரசு கணக்கு கொடுப்பதில்லை.
செலவு கணக்கையும் காட்டுவதில்லை ஏனென்றால் தி.மு.க.,வினர் ஜெயிலில் இருப்பார்கள்; இல்லையேல் பெயிலில் இருப்பார்கள். அடுத்த, 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசாக்கும், சிறப்பான திட்டங்களை மோடி செயல்படுத்தி வருகிறார். 11வது இடத்திலிருந்து இந்திய பொருளாதாரம் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் 2ஜி ஊழல்வாதி ராஜாவை தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.