ADDED : ஏப் 17, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:லோக்சபா
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, ஆந்திராவில் இருந்து போலீசார், ஊர்
காவல் படையினர், 600 பேர் வந்துள்ளனர்.
மாநகரில் உள்ள திருமண
மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆந்திராவில்
இருந்து சட்டம் ஒழுங்கு போலீசார், 99 பேர் நேற்று காலை ஈரோடுக்கு
வந்தனர். சத்தியமங்கலத்தில் இருந்து அதி விரைவு படையினரும் தேர்தல்
பாதுகாப்பு பணிக்கு ஈரோடு வந்துள்ளனர். மலை கிராம பகுதிகளில்
தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கைகளில் யாரேனும்
ஈடுபடுகிறார்களா? என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து
வருகின்றனர்.

