/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளிக்கு வெட்டு ஆவேச விவசாயி கைது
/
தொழிலாளிக்கு வெட்டு ஆவேச விவசாயி கைது
ADDED : ஆக 20, 2024 02:32 AM
ஈரோடு: மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி, காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 60; வாழை இலை அறுக்கும் தொழிலாளி. பரிசல் துறை நான்கு ரோடு பகுதியில் வசித்து வருகிறார். மகன்கள் பூபதி, கார்த்திக்குடன், சின்னியம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி, ௪௫, தோட்டத்தில், ராமசாமி வேலை செய்து வந்தார். முன்பணமாக, 20 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.
ஒரு மாதமாக பெரியசாமி முறையாக சம்பளம் வழங்காததால், மூவரும் வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் ராமசாமி வீட்டுக்கு சென்ற பெரியசாமி, வேலைக்கு வராதது குறித்து கேட்டபோது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது பெரியசாமி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமசாமியை வெட்டியுள்ளார். இதில் அவருக்கு ஆள்காட்டி விரலில் ரத்த காயம் ஏற்பட்டது. தடுக்க வந்த மகன்கள் பூபதி, கார்த்திக்கிற்கும் வெட்டு விழுந்தது. பெரியசாமியை மூவரும் குச்சியால் அடித்துள்ளனர். ராமசாமி புகாரின்படி வழக்குப்பதிந்த மொடக்குறிச்சி போலீசார், பெரியசாமியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

