/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குப்பை கிடங்காகமாறும் ஆப்பக்கூடல் ஏரி
/
குப்பை கிடங்காகமாறும் ஆப்பக்கூடல் ஏரி
ADDED : ஏப் 09, 2025 01:36 AM
குப்பை கிடங்காகமாறும் ஆப்பக்கூடல் ஏரி
பவானி:ஆப்பக்கூடல் டவுன் பஞ்., உட்பட்ட ஆப்பக்கூடல் ஏரி, பவானி---சத்தி சாலையில், 126 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் மூலம் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சமீபமாக டவுன் பஞ்., பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை, ஏரி கரையோரத்தில் கொட்டுகின்றனர். குப்பைக்கு தீயும் வைப்பதால் பல சமயங்களில் புகைமூட்டமாகவே உள்ளது.
இந்நிலையில் ஏரிக்கரையில் கோழி கழிவையும் கடந்த சில நாட்களாக, இரவில் வந்து கொட்டி செல்கின்றனர். குப்பை மற்றும் இறைச்சி கழிவு நீரில் மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. டவுன் பஞ்., நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

