/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'டல்' கனி மார்க்கெட்டில் 'மக்கர்' எஸ்கலேட்டர் 'ஊழல் சைடுல... ஊழல் ரைட்ல... நடந்ததா'
/
'டல்' கனி மார்க்கெட்டில் 'மக்கர்' எஸ்கலேட்டர் 'ஊழல் சைடுல... ஊழல் ரைட்ல... நடந்ததா'
'டல்' கனி மார்க்கெட்டில் 'மக்கர்' எஸ்கலேட்டர் 'ஊழல் சைடுல... ஊழல் ரைட்ல... நடந்ததா'
'டல்' கனி மார்க்கெட்டில் 'மக்கர்' எஸ்கலேட்டர் 'ஊழல் சைடுல... ஊழல் ரைட்ல... நடந்ததா'
ADDED : ஆக 20, 2024 02:23 AM
ஈரோடு: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஈரோடு கனி மார்க்கெட்டில், 60 கோடி ரூபாய் செலவில் நான்கு தளங்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டது. லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன், 292 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட எஸ்கலேட்டர், ஒரு மாதத்துக்கு முன்புதான் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. இதனால் எஸ்கலேட்டர் அமைத்ததில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று, கனி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறியதாவது:
வணிக வளாகத்தில் ஆறு எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் கடைகள் பயன்பாட்டுக்கு வராததால், அத்தளத்தில் உள்ள இரு எஸ்கலேட்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தரைத்தளத்தில் உள்ள இரு எஸ்கலேட்டர்கள் மீண்டும் பழுதாகி விட்டன. பயன்பாட்டுக்கு வந்த சில வாரங்களில், மூன்று முறைக்கு மேல் பழுதாகி விட்டது. இதனால், துணி எடுக்க வரும் மக்கள், படி ஏற முடியாமல், திரும்பி செல்கின்றனர். மூன்றாவது, நான்காவது தளத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதித்துள்ளது.
எஸ்கலேட்டர் அடிக்கடி பழுதாவதால், தரமற்றதாக இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. முறைகேடு நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது. மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் ஸ்வரன் சிங்கிடம் விபரம் கேட்க, மொபைல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும், அழைப்பை ஏற்காமல், பிறகு தொடர்பு கொள்கிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.

