/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பசி 'பத்தும்' செய்யும் ஆனால் பசி தீர்க்காது!
/
பசி 'பத்தும்' செய்யும் ஆனால் பசி தீர்க்காது!
ADDED : செப் 11, 2024 04:17 AM
ஈரோடு: நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்தவர் ஜானகி, 44; ஈரோடு பெரியார் நகரில் டெய்லர் கடை வைத்துள்ளார். நேற்று காலை கடை திறக்க வந்தார். கைப்பையை கீழே வைத்து விட்டு கதவை திறக்க முற்பட்டார். அப்போது, 15 வயது சிறுவன் பையை எடுத்து கொண்டு ஓட்டம் பிடிக்கவே, ஜானகி கூச்சலிட்டார். இதை கேட்ட அப்பகுதியினர் சிறுவனை விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
ஈரோடு டவுன் போலீசார் சிறுவனை மீட்டு விசாரித்தனர். பவானியை சேர்ந்த சிறுவன், வீட்டில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும், பசி தாங்க முடியாததால், கைப்பையை திருடி ஓடியதும் தெரிய வந்தது.
ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற போலீசார், உணவு வாங்கி கொடுத்து அனுப்பினர். அதேசமயம் ஜானகி இதுகுறித்து புகார் தரவில்லை.

