தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சமையலறையில் மனைவி சடலம்படுக்கை அறையில் கணவன் மீட்பு

சமையலறையில் மனைவி சடலம்படுக்கை அறையில் கணவன் மீட்பு

சமையலறையில் மனைவி சடலம்படுக்கை அறையில் கணவன் மீட்பு


ADDED : மார் 21, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமையலறையில் மனைவி சடலம்படுக்கை அறையில் கணவன் மீட்பு

ஈரோடு:ஈரோடு, பெரியசேமூர், இ.பி.பி.நகரை சேர்ந்தவர் இளங்கோவன். சுமை தொழிலாளியான இவரின் மனைவி புனிதா, 30; நேற்று காலை, 11:00 மணியளவில் வீட்டில் இருந்து தொடர்ந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

சமையலறையில் புனிதா இறந்து கிடந்தார். வீட்டுக்குள் புகைமூட்டமாக இருந்தது. சோபா முற்றிலுமாக எரிந்திருந்தது. படுக்கை அறையில் இருந்த இளங்கோவனை மீட்டு வெளியே அழைத்து வந்துள்ளனர். இறந்த புனிதா உடலில் தீக்காயம் இல்லை. வீட்டுக்குள் சூழ்ந்த புகையால் மூச்சு விட முடியாமல் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us