தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழாதலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழாதலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழாதலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்


ADDED : பிப் 27, 2025 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழாதலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

புன்செய்புளியம்பட்டி:மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பவானிசாகர் அருகே வனப்பகுதி கோவிலில், தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.பவானிசாகர் அடுத்துள்ள விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி, அய்யம்பாளையம் கிராமத்தில் தொட்டம்மா, சின்னம்மா மற்றும் மஹாலட்சுமி கோவில்கள் உள்ளன. நடப்பாண்டு, மஹா சிவராத்திரி விழாவையொட்டி கிராம தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு விழா தொடங்கியது. கிராமத்தில் உள்ள குரும்பர் இன மக்கள், பாரம்பரியமாக குலதெய்வங்களிடம் அருள் கிடைக்க வேண்டி வழிபட்டனர். அருள் கிடைத்த பக்தர்கள், தாங்களாகவே சுவாமி முன் குவித்து வைக்கப்பட்ட தேங்காய்களை எடுத்து தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பவானி ஆற்றுக்கு அம்மன் அழைப்பதற்காக புறப்பட்டு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து, ஆற்றங்கரையிலும் அருள் வந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தனர். பின்னர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக இரவு கோவிலை வந்தடைந்தனர். பின், பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இரவு முழுவதும் கண்விழித்து மஹாசிவராத்திரி விழாவை கொண்டாடினர். விடிய விடிய நடந்த விழாவில் கோவை மாவட்டம், தீத்திபாளையம், அஜ்ஜனுார், கல்வீரம்பாளையம், சின்னத்தடாகம், கெம்பையனுார், வண்டிக்காரனுார், சுண்டப்பாளையம், கஸ்துாரிபாளையம் கிராமங்களிலிருந்து குரும்பர் இன மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us