ADDED : டிச 18, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தொழிலாளருக்கு விரோதமான புதிய சட்டங்களை அமல்படுத்தக்கூடாது, கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கையில் கரும்புடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் பாலசந்திபோஸ், சி.ஐ.டி.யு., செயலாளர் ஜெயசீலன் பேசினர். நிர்வாகிகள், தீத்தான், புஸ்பம் கலந்துக்கொண்டனர்.

