/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழைப்பொழிவு,நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர்... தட்டுப்பாடு; விலைக்கு வாங்கும் நிலையை தவிர்க்க தேவை மாற்று ஏற்பாடு

ADDED : ஜூலை 31, 2025 03:20 AM

மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். மாவட்டம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிணறுகள், 2500க்கும் மேற்பட்ட குளங்கள், 7 அணைகள் உள்ளன.
இங்கு நிரம்பும் நீரே விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
வழக்கமாக குளிர் காலம், கோடைகாலம், தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய 4 பருவ காலங்களுக்கும் சேர்த்து ஆண்டு முழுவதும் 836.மி.மீ., மழை பெய்ய வேண்டும். குளிர் காலமான ஜனவரி, பிப்.,ல் பெய்ய வேண்டிய 44.7 மி.மீ., அளவில் 18.82மி.மீ., மழை பெய்துள்ளது.
ஆனால் கோடைகாலமான மார்ச்,ஏப்ரல்,மே யில் பெய்ய வேண்டிய 155.1 அளவை விட சற்று அதிகமாக பெய்தாலும் குளங்கள் துார்வாரப்படாமல் ,சேமிக்க மாற்று வழிகளை பயன்படுத்தாமல் விட்டது போன்ற காரணத்தினால் அவையும் வீணாகி விட்டது.
தென்மேற்கு மழையில் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட், செப்டம்பரில் 218.3மி.மீ., பெய்ய வேண்டிய அளவில் தற்போது (ஜூலை) வரை 32.02 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது.
இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் வெகுவாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விலைக்கு தண்ணீர் வாங்கும் சூழலும் உருவாகி உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதே நிலை நீடித்தால் மாவட்டம் முழுவதும் கடும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
தண்ணீர் சேமிப்பிற்கும், தற்போதைய தேவைக்கும் மாற்று ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.