/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் வேள்வி பூஜை தொடக்கம்
/
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் வேள்வி பூஜை தொடக்கம்
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் வேள்வி பூஜை தொடக்கம்
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் வேள்வி பூஜை தொடக்கம்
ADDED : பிப் 14, 2024 05:17 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் நாளை (பிப். 15) கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று முதற்கால வேள்வி தொடங்கியது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் நாளை (பிப். 15) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு நேற்று மாலைமுதற்கால வேள்வி தொடங்கியது.
நேற்று காலை நன்மங்கள இன்னிசை, பிள்ளையார் வழிபாடு, பிள்ளையார் வேள்வி, தலம் புனிதமாக்கல் நடந்தது. நேற்று மாலை புனித மண் எடுத்தல், திருமுளைப்பாலிகை இடுதல், காப்பு கட்டுதல், திருக்குடங்கள் நிறுவுதல் நடந்தது. தொடர்ந்து அருள் சக்தியை திருக்குடங்களில் எழுந்தருளச் செய்தல், வேள்விச்சாலை புகுதல், முதற்கால வேள்வி தொடக்கம் உள்ளிட்ட பல்பொருள் வேள்வி நடந்தது.
இரவு பேரொளி வழிபாடு, திருமறை, திருமுறை விண்ணப்பம், திருநீறு , திருவமுது வழங்குதல் நடந்தது.
ஏற்பாடுகளை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா செய்துள்ளனர்.

