ADDED : மார் 16, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையை சிதைக்கும் பா.ஜ.,அரசை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மைதீன்பாவா தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன்,மேற்கு மாவட்ட செயலாளர் திருவளவன்,கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முகம் பங்கேற்றனர்.
மண்டல துணை செயலாளர் அன்பரசு,மாநில துணை செயலாளர் திருச்சிற்றன், மாவட்ட அமைப்பாளர் பாபு, முதன்மை செயலாளர் பாவரசு,துணை பொதுச்செயலாளர் கனியமுதன்,மண்டல செயலாளர் தமிழ்வாணன் பங்கேற்றனர்.

