/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அண்ணாசாலையில் தொடரும் நெரிசல்
/
அண்ணாசாலையில் தொடரும் நெரிசல்
ADDED : டிச 22, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் அண்ணாசாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சுற்றுலாதலமான கொடைக்கானலில் வணிக நிறுவனங்கள், பாங்க், போலீஸ் ஸ்டேஷன், பத்திரவுப்பதிவு, தாலுகா அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு வரும் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதியின்றி ரோட்டின் இரு புறம் நிறுத்தும் போக்குள்ளது.
ஒரு வழிப்பாதையான இந்த ரோட்டில் நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் முன்வராத நிலையில் சுற்றுலா பயணிகள் ,உள்ளூர்வாசிகள் அவதிப்படுகின்றனர். இந்த ரோட்டில் நெரிசலின்றி போக்குவரத்து தொடர போலீசார் கடுமை காட்ட வேண்டும்.

