/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தோட்டக்கலை பயிர்களை காக்க டிப்ஸ்
/
தோட்டக்கலை பயிர்களை காக்க டிப்ஸ்
ADDED : அக் 31, 2024 02:59 AM
வத்தலக்குண்டு: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 9 புயல்கள் வரும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது.
கடந்த காலங்களைப் போன்று பரவலாக மழை கொடுக்காமல் மேகங்கள் திரண்டு ஆங்காங்கே கனமழையாக பெய்கிறது. இந்த காலகட்டத்தில் வத்தலக்குண்டு ஒன்றியத்தில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்த வயல்களில் நீர் தேங்காமல் அகற்ற வேண்டும்.
தென்னை, கொய்யா, மா ஆகியவற்றில் காய்ந்த கிளைகளை, மட்டைகளை அகற்ற வேண்டும். காற்றின் எதிர் திசையில் வாழை மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க சவுக்கு, யூகலிப்டஸ் குச்சிகளைக் கொண்டு முட்டுக் கொடுக்க வேண்டும். வேர்ப்பகுதியில் பூஞ்சான நோய்களிலிருந்து காக்கக்கூடிய டிரைக்கோ டெர்மா விரிடி போன்ற நுண்ணுயிர் உரங்களை வேர்ப்பகுதியில் கொடுக்க வேண்டும். மரங்கள் சாயாமல் இருக்க அடிப்பகுதியில் மண் அணைக்க வேண்டும்.
வெங்காயம், கத்தரி, தக்காளி, மிளகாய், சம்மங்கி ஆகியவற்றை சீரான இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

