/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் கான்ட்ராக்டர் கொலையில் மேலும் மூவர் கைது
/
திண்டுக்கல் கான்ட்ராக்டர் கொலையில் மேலும் மூவர் கைது
திண்டுக்கல் கான்ட்ராக்டர் கொலையில் மேலும் மூவர் கைது
திண்டுக்கல் கான்ட்ராக்டர் கொலையில் மேலும் மூவர் கைது
ADDED : ஜூலை 26, 2025 08:30 AM

சாணார்பட்டி: ரூ.50 லட்சம் கேட்டு திண்டுக்கல் மாநகராட்சி கான்டராக்டர் முருகன் 56, கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த கான்ட்ராக்டரும் தி.மு.க., அனுதாபியான முருகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த வீரபத்திரனுக்கும் 34, கோயில் நிர்வாகம் தொடர்பான தகராறில் முன் விரோதம் இருந்தது.
இந்நிலையில் ரூ.50 லட்சம் கேட்டு வீரபத்திரன், ஆதரவாளர்களால் கடத்தப்பட்ட முருகன் சாணார்பட்டி அருகே காரிலேயே வைத்து குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வீரபத்திரன், ரவுண்ட் ரோடு ஷேக் பரீத் 29, கோவிந்தாபுரம் சரவணகுமார் 38, சங்கர் 33, ஆர்.எம்.காலனி விஜய் 28, ஆகியோரை சாணார்பட்டி போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக செல்லாண்டியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த அசோக் 41, ராஜா 41,ஆர்.எம். காலனியை சேர்ந்த விஜயகுமார் 24, ஆகிய மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

