/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதுவும் தேவைதானே.. அவசியம் மறு நில அளவை திட்டம்; 41 ஆண்டாகியும் தொடரும் அவலம்

ADDED : அக் 04, 2024 06:56 AM

மாவட்டத்தில் ஏராளமான சோலை வனங்கள் சார்ந்த மலைப் பகுதி,ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலம், தொழிற்சாலைகள், விவசாயம் சார்ந்த அதிக மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் 1980 - முதல் 1983 வரை இங்குள்ள நிலங்கள் (ரீ செட்டில்மெண்ட்)மறு நில அளவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது வரை வருவாய்த்துறை ஆவணங்களில் வழிகாட்டு நெறிமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அப்போதைய மறுநில அளவை திட்டத்தில் நிலங்களின் வகைப்பாடு பயன்பாடு பற்றி விளக்கப்பட்டுள்ளது. இந்த நில அளவை திட்டத்தில் பயன்பாட்டு பகுதிகளின் வகைப்பாடுகள் தவறாக பதிவிடப்பட்டுள்ளது. நில வகைப்பாட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சீர் செய்ய கோரிக்கையை எழுந்தப் போதும் மறு நில அளவைத் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. வழக்கமாக ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால் 41 ஆண்டுகளாக மாவட்டத்தில் மறு நில அளவைத் திட்டம் செயல்பாட்டிற்கு வராத நிலை உள்ளது. இதில் கொடைக்கானல் உட்பட பிற மலைப்பகுதிகளில் அளவீடு வகைப்பாட்டில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இதை கருதி மறு நில அளவை திட்டத்தை மாவட்டம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.