/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் தொடங்கியது புத்தகத்திருவிழா
/
திண்டுக்கல்லில் தொடங்கியது புத்தகத்திருவிழா
ADDED : அக் 11, 2024 07:22 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், இலக்கிய களம் சார்பில் 11-வது புத்தக திருவிழா, திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
அக். 20- வரை நடக்கும் இதில் 126 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஆன்மிகம், இலக்கியம், கவிதை உள்பட 10 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதன் தொடக்க விழா நேற்று மாலை 6:00 மணிக்கு நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தொடங்கி வைத்தார். தலைமை வகித்த கலெக்டர் பூங்கொடி முதல் விற்பனையை தொடங்கி வைக்க எஸ்.பி., பிரதீப் பெற்றுக்கொண்டார். டி.ஆர்.ஓ., சேக் முகையதீன் வரவேற்றார். திண்டுக்கல் இலக்கிய கள தலைவர் மனோகரன் பேசினார்.
நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கூறியதாவது : புத்தகத்திருவிழா நடத்துவதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன், நற்சிந்தனைகள் வளர்கிறது. அரசியலை கடந்து, சித்தாந்தங்களை கடந்து, ஜாதி, மத உணர்வுகளை கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்து புத்தக கண்காட்சிகள் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. புத்தகங்கள் படிப்பதால் சைபர் குற்றங்கள் குறைகிறது. இதுபோன்ற புத்தக திருவிழாக்கள் அதிகம் நடத்தவேண்டும் என்றார்.

