/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிலம்பத்தில் சாதித்த எஸ்.பி.எம்.,பள்ளி
/
சிலம்பத்தில் சாதித்த எஸ்.பி.எம்.,பள்ளி
ADDED : டிச 14, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: சின்னாளபட்டியில் நடந்த மாவட்ட சிலம்பம் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஒட்டன்சத்திரம் எஸ்.பி. எம். மெட்ரிக் மேல்நிலை பள்ளி வென்று சாதனை படைத்துள்ளது.
20 க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட நிலையில் ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அனைத்துப் போட்டியிலும் முதல் இடத்தை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். மாணவர்களை பள்ளித் தாளாளர் ஆர்.வி.கே ரத்தினம், செயலர் சங்கீதா, பள்ளி முதல்வர் சிவகவுசல்யாதேவி பாராட்டினர்.

