/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் மழையால் மகசூல் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயம்
/
ஒட்டன்சத்திரத்தில் மழையால் மகசூல் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயம்
ஒட்டன்சத்திரத்தில் மழையால் மகசூல் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயம்
ஒட்டன்சத்திரத்தில் மழையால் மகசூல் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயம்
ADDED : ஜன 22, 2025 09:05 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சின்ன வெங்காயம் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி, காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, சாமியார்புதுார் சுற்றிய கிராமப் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகமாக நடவு செய்யப்பட்டுள்ளது.
பல தோட்டங்களில் அறுவடை தொடங்கி உள்ளது. இன்னும் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் கன மழை பெய்தது.
இந்த மழை அறுவடைக்கு தயாரான வெங்காயத்திற்கு உகந்ததாக இல்லை. மழையால் வெங்காயம் பாதிக்கப்பட்டு அழுகல் நிலைக்கு சென்று விட்டது.
இதனால் பாதி மகசூல் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது.
மார்க்கெட்டில் புதிய சின்ன வெங்காயம் கிலோ ரூ.60க்கு மேல் விற்கும் நிலையில் மகசூல் கை கொடுக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
காவேரியம்மாபட்டி விவசாயி பழனிமுத்து கூறுகையில், தற்போது பெய்த மழை காரணமாக சின்ன வெங்காயம் மகசூல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது '' என்றார்.