/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
யூனியன் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
/
யூனியன் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
ADDED : டிச 27, 2025 06:51 AM
நத்தம்: -நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மணப்புளிக்காடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழர் தேசம் கட்சி சார்பில் குடியேறும் போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் பூமி அம்பலம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பிரபுஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் மச்சக்காளை, ஆண்டிச்சாமி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அலுவலகம் முன்பாக கோஷங்களை எழுப்பியபடி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளே செல்ல முயன்றனர்.
பி.டி.ஓ., ரவீந்திரன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

