/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மஞ்சளாறு அணை நீரை திறக்க தீர்மானம்
/
மஞ்சளாறு அணை நீரை திறக்க தீர்மானம்
ADDED : டிச 12, 2025 06:51 AM
வத்தலக்குண்டு: மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதற்கான விவசாயிகளின் கருத்துகேட்கும் கூட்டம் வத்தலக்குண்டு பிரிவு அலுவலகத்தில் உதவிபொறியாளர்கள் தளபதி, கமலக்கண்ணன் முன்னிலையில் நடந்தது. மஞ்சளாறு அணை பாசன சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள்,விவசாயிகள் பங்கேற்றனர்.
கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் மஞ்சளாறு அணையிலிருந்து முறைப்பாசனம் மூலம் முதல் மூன்று நாட்கள் மூங்கில் அணைக்கட்டு, புது அணைக்கட்டு, நாகர்வள்ளி அணைக்கட்டுக்கு திறந்து விட வேண்டும். மீதி உள்ள நான்கு நாட்களுக்கு கணவாய்ப்பட்டி, வைரவன், பெரியகுளம், பிலாத்து, குன்னுவராயன் கோட்டை, ஆலங்குளம் அணைக்கட்டுகளுக்கு திறந்து விட வேண்டும்.
பழைய ஆயக்கட்டிற்கு 45 கன அடி, வலது பிரதான கால்வாய் 30 கன அடி என மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை விரைவில் பாசனத்திற்கு திறந்து விடுமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

