/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த கட்டடங்களை பயன்படுத்த தடை
/
சேதமடைந்த கட்டடங்களை பயன்படுத்த தடை
ADDED : அக் 17, 2024 06:07 AM

எச்சரிக்கை போர்டு, முட்கள் வைத்து தடுப்பு
வேடசந்துார்:தமிழகத்தில் தொடர் மழை காரணமாக சேதமடைந்த பள்ளி, அங்கன்வாடி, பஸ் ஸ்டாப் நிழற்குடை போன்ற கட்டடங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. சேதம் அடைந்த வீடுகளில் உள்ளோரையும் வேறு இடங்களில் தங்க வைத்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படாத வண்ணம் கண்காணிக்க அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
சேதமடைந்த பள்ளி, அங்கன்வாடி, பஸ் ஸ்டாப் நிழற்குடை கட்டடங்கள் பயன்படுத்தக் கூடியதாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
விபத்து அபாயம் உள்ள கட்டடங்களில் பயன்படுத்த கூடாது என அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதோடு சேதமடைந்த வீடுகள் , குடிசை வீடுகளில் மழையால் பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் குடியிருப்போரை தனியாக தங்க வைத்து கண்காணிக்கவும் அறிவுறுத்தி உள்ளதால் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் செலுத்தி வருகின்றனர்.

