/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி மறுப்பு போலீசார் -- பா.ஜ.,வினர் தள்ளுமுள்ளு 34 பேர் கைது
/
ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி மறுப்பு போலீசார் -- பா.ஜ.,வினர் தள்ளுமுள்ளு 34 பேர் கைது
ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி மறுப்பு போலீசார் -- பா.ஜ.,வினர் தள்ளுமுள்ளு 34 பேர் கைது
ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி மறுப்பு போலீசார் -- பா.ஜ.,வினர் தள்ளுமுள்ளு 34 பேர் கைது
ADDED : மார் 10, 2024 02:21 AM
நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே முத்துநாயக்கன்பட்டியில் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி மறுத்ததால் போலீசார், பா.ஜ.,வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பா.ஜ.,வினர் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழநி அருகே முத்துநாயக்கன்பட்டியில் பா.ஜ., மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரன் தலைமையில் 'மோடி ரேக்ளா ரேஸ்' இன்று (மார்ச் 10) நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனிடையே நேற்று அதிகாலை 1:00மணிக்கு அங்கு வந்த சாமிநாதபுரம் போலீசார் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.,வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அவர்களை கைது செய்ய முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் பின் பா.ஜ.,வினர் 34 பேரை போலீசார் கைது செய்தனர். மதியம் 2:00 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.
பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி புகழை பரப்ப ரேக்ளா ரேஸ் நடத்த பிப்.,23ல் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதன்படி பிப்.,27 ல் அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துாண்டுதல்படி போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் மார்ச் 3ல் மீண்டும் அனுமதி பெறப்பட்டு இன்று (மார்ச் 10) போட்டி நடத்த அனுமதித்தனர். இந்தநிலையில் போட்டி நடத்த அனுமதி மறுத்துள்ளனர். போலீசார் அமைச்சரிடம் விசுவாசத்தை காட்ட இவ்வாறு நடந்து வருகின்றனர். தி.மு.க.,வினர் நடத்தும் போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றார்.

