ADDED : செப் 09, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சார்பில் காவலர்கள் தினம்' மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி., பிரதீப் தலைமையில் நடந்தது.
பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மரம் நடும் விழா, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி, போலீசாருக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், போலீசார் என 140 பேருக்கு கேடயம், பாராட்டுச் சான்றுகளை எஸ்.பி., பிரதீப் வழங்கி கவுரவித்தார்.
காவல்துறையில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள், பதவி நிலைகள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் 800 பேர் கலந்துகொண்டு பார்வையிட்டு விளக்கம் கேட்டறிந்தனர்.