/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டு சேகரிப்பில் மக்கள் கேள்வி கேட்பார்கள்; ஒன் டூ ஒன் மூலம் தி.மு.க.,வில் ‛'அலர்ட்'

ADDED : டிச 30, 2025 07:32 AM
வடமதுரை: 2026 சட்டசபை தேர்தலுக்காக பூத் வாரியாக நியமிக்கப்பட்ட ஏஜன்ட், கமிட்டியினருடன் 'ஒன் டூ ஒன்' பாணியில் தி.மு.க.,சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
வேல்வார்கோட்டை புதுகலராம்பட்டியில் நடந்த இக்கூட்டத்தில் வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன் பேசுகையில், ஆளும் கட்சி என்றாலே மக்கள் பல்வேறு குறைகளுடன் கேள்விகளாக கேட்பர். ஓட்டு சேகரிக்க செல்லும்போது இது கூடுதலாக இருக்கும்.
நல்ல விஷயங்களை காட்டிலும் குறைகள் மட்டுமே மக்களிடம் பெரிதாக பேசப்படும்.
அரசின் அனைத்து திட்டங்களையும் வாக்காளருக்கு நினைவூட்ட வேண்டும். அரசு பணம் தானே என எதிர் கேள்வி கேட்போரிடம், அதையும் வழங்க நல்ல உள்ளம் வேண்டுமே எனக்கூறி புரிய வைக்க வேண்டும்.
நடப்பது பொது தேர்தல் என்றாலும் இடைத்தேர்தல் பாணியில் 'மைக்ரோ லெவல்' முறையிலான பணி செய்வது அவசியம் என்றார்.
தி.மு.க., நிர்வாகிகள் சொக்கலிங்கம், பாலசுப்பிரமணி, சுப்புராமன், அன்பழகன் பங்கேற்ற னர்.