ADDED : டிச 25, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழக சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கட்டடத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், விசாலாட்சி முன்னிலை வகித்தனர். குறைந்தபட்ச பென்ஷன் ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜன. 7ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நிர்வாகிகள் நாராயணசாமி, குமரம்மாள், பெருமாள் கலந்துக் கொண்டனர்.

