/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலையில் குவிந்த பயணிகள்: 3 கிலோ மீட்டருக்கு அணி வகுத்த வாகனங்கள்
/
சிறுமலையில் குவிந்த பயணிகள்: 3 கிலோ மீட்டருக்கு அணி வகுத்த வாகனங்கள்
சிறுமலையில் குவிந்த பயணிகள்: 3 கிலோ மீட்டருக்கு அணி வகுத்த வாகனங்கள்
சிறுமலையில் குவிந்த பயணிகள்: 3 கிலோ மீட்டருக்கு அணி வகுத்த வாகனங்கள்
ADDED : நவ 01, 2024 05:15 PM

திண்டுக்கல் : தீபாவளி தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு படையெடுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிறுமலை பழையூர் பகுதியில் 3 கிலோமீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் இல்லாமல் ஊர் மக்கள் திணறுகின்றனர்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கி திண்டுக்கல் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வெளி மாவட்டங்களிலிருந்து அதிகளவிலான பயணிகள் வருகின்றனர். இங்கு சிறுமலை மலையேற்ற பாதை தொடங்கும் இடத்தில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சிறுமலை,புதுார்,பழையூர் போன்ற பல்வேறு ஊர்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு வளைவு பகுதிகளிலும் நின்று நகரை பார்வையிட்டு மலை முகடுகளை புகைபடம் எடுக்கின்றனர். நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் இன்று,நாளை தொடர்விடுமுறையாக இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள்,டூவீலர்களில் குடும்பம் குடும்பமாக சிறுமலைக்கு படையெடுத்தனர். இங்குள்ள பழையூர்,புதுார்,சிறுமலை போன்ற ஊர்களில் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குறுகிய ரோடுகளாக உள்ளன. இதனால் புதுார்,பழையூர் பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள் 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு அணிவகுத்து நின்றது. இதனால் அவசர நேரத்திற்கு ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டும் என சிறுமலை ஊராட்சி சார்பில் பல மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் இதுவரை எந்த போலீசாரும் அங்கு செல்வதில்லை. தாலுகா போலீசாரின் கட்டுப்பாட்டிலிருக்கும் சிறுமலையில் எந்த சம்பவங்கள் நடந்தாலும் கீழே இருந்து தான் போலீசார் செல்ல வேண்டும். இங்கேயே நிரந்தரமாக போலீஸ் பீட்கள் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

