/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அந்நிய மரங்களுக்கு மாற்றாக சோலை மரங்கள்
/
அந்நிய மரங்களுக்கு மாற்றாக சோலை மரங்கள்
ADDED : அக் 29, 2024 05:52 AM

கொடைக்கானல் சுற்றுப்பகுதிகளில் அந்நிய மரங்களுக்கு மாற்றாக சோலை மரங்களை நடவு செய்யும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.
மலைமுகடுகள் சூழ்ந்த பசுமையான புல்வெளிகள், அடர்ந்த வனப்பகுதி என தன்னகத்தே தனக்கென ஒரு அங்கீகாரம் பெற்ற சுற்றுலாத்தலமாக கொடைக்கானல் விளங்குகிறது. சுற்றுலாத்தலம் உள்ள வனப்பகுதி வனச் சரணாலயமாக உள்ள நிலையில் இங்கு சோலை மரங்களுக்கு மாற்றாக அந்நிய மரங்களின் ஆதிக்கம் 30 ஆயிரம் ஹெக்டரில் விரிந்தது.
இதன் அடியில் புல், உள்ளிட்ட இதர தாவரங்கள் வளராத நிலையில் இங்குள்ள வனவிலங்குகளுக்கு உணவு சங்கிலி பாதித்துள்ளது. வேட்டில், பைன், யூகலிப்டஸ் உள்ளிட்ட அந்நிய மரங்களின் வரவால் வனத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அந்நிய மரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
வேட்டில் மரங்களை அகற்றி அதற்கு மாற்றாக 250 எக்டேரில் செண்பகம், புறா திண்ணி, கருந்தகிரி, ருத்ராட்சம், நாவல் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. வனவிலங்குகளுக்கு தேவையான புல்வெளிகளையும் வனத்துறை உருவாக்குகிறது. யானைகளுக்கு தேவையான கிரைசோ போகன் என்ற புற்களை வனப்பகுதியில் நடவு செய்கின்றனர்.

