/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
/
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
ADDED : நவ 12, 2024 11:50 PM
திண்டுக்கல் ; பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி தர வேண்டும். கோமாரி நோய் தடுப்பு ஊசி போட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவின் மையங்கள் முன்பாக கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்தவுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற சங்க மாநில துணைச்செயலாளர் வெண்மணிச்சந்திரன் கூறியதாவது : தற்போது பசு மாடு பால் லிட்டருக்கு ரூ.35 தரப்படும் நிலையில் ரூ.10 உயர்த்தி ரூ.45, எருமை பால் லிட்டருக்கு ரூ.10 சேர்த்து ரூ.55 ஆக வழங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி ஆண்டுக்கு 2 முறை போடும் நிலையில் மார்ச்சில் தடுப்பூசி போடப்பட்ட பின் 2வது தடுப்பூசி செப்டம்பரில் போட வேண்டும். ஆனால் கால்நடை கணக்கெடுப்பு நடைபெறுவதன் காரணமாக தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழையால் கோமாரி தொற்று வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் தடுப்பூசியை நிறுத்தக்கூடாது.
மானிய விலையில் கலப்புத் தீவனம் வழங்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கும் கால்நடை மருத்துவமனையை துவங்க வேண்டும். கால்நடைப்பராமரிப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். எட்டு மாதங்களாக ஆவினில் வழங்கப்படாத நிலுவை ஊக்கத்தொகையை உடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம். முதற்கட்டமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 11 ஆவின் மையங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது என்றார்.

