/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரு மாதமாக வரல குடிநீர்; மக்கள் மறியல்
/
இரு மாதமாக வரல குடிநீர்; மக்கள் மறியல்
ADDED : டிச 30, 2025 07:37 AM
திண்டுக்கல்: இரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததை கண்டித்து திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியில் பொதுமக்கள் ரோடு மறியல் செய்தனர்.
பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி உட்பட்ட வடக்கு ரங்கநாதபுரம், ஓடையூர், சி.டி.ஓ.காலனி பகுதிகளில் இரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
ஆத்திரமடைந்த மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் நுாற்றுக்கு மேற்பட்டோர் திண்டுக்கல் - திருச்சி ரோடு உழவர்சந்தை அருகே காலிக்குடங்களுடன் மறியல் செய்தனர். தாலுகா போலீஸ், ஊராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க கலைந்து சென்றனர்.

