ADDED : அக் 03, 2024 06:12 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இங்குள்ள பண்ணைக்காடு மயான காரியம்மன், கானல்காடு பூதநாச்சியம்மன், தாண்டிக்குடி பாலமுருகன், அரசன் கொடை கதவுமலைநாதன், குறிஞ்சியாண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செம்பட்டி:அக்கரைப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை குகையில், சடையாண்டி கோயிலில் நேற்று, அடிவாரம் மலை குகை கோயில் ஆகிய இடங்களில், மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் பறவை காவடி, பால் காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
சின்னாளபட்டி: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு காப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்ஸவர் கோதண்டராமருக்கு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
தெத்துப்பட்டி : ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

