/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் விலக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
/
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் விலக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் விலக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் விலக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
ADDED : செப் 13, 2025 01:50 AM
திண்டுக்கல்:''2010-க்கு முன் நியமித்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்க வேண்டுமென'' தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் டெட் தேர்ச்சி அடிப்படையிலே ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில் 2010-க்கு முன் நியமித்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்க வேண்டுமென தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, துணைத்தலைவர் விஜய் கூறியதாவது :
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 2 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்பது மிகவும் வேதனையான விஷயமாக இருக்கிறது. வாழ்வாதாரத்தையும், லட்சோப லட்ச ஆசிரியர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை அல்லது சரியான கொள்கை முடிவை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2010-க்கு முன் நியமித்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். இது குறித்து பிரதமர் வரை கோரிக்கை வைத்துள்ளோம். கடிதமும் எழுதி உள்ளோம் என்றனர்.