ADDED : செப் 20, 2025 04:25 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தேசிய அளவிலான விழிப்புணர்வு நாணயக் கண்காட்சி நடந்து வருகிறது .
திண்டுக்கல் நந்தவனம் ரோடு தரகு மண்டி மஹாலில் தேசிய அளவிலான விழிப்புணர்வு நாணயக் கண்காட்சி நடைபெற்றது.
இதை மாநகராட்சி மேயர் இளமதி தொடங்கி வைத்தார். அரசன் ரியல் எஸ்டேட் சேர் மன் சண்முகம், ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், ரியாஸ், ரூபன், அந்தோணி, சரவணன் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இக் கண்காட்சியில் 2 ஆயிரம் ஆண்டுகள் முந்தைய மன்னர்கள் வெளியிட்டு பயன்படுத்திய நாணயங்கள், பணத்தாள்கள், பழமையான பொருட்கள், அஞ்சல் தலைகள், வரலாற்று சிறப்பு பொருட்கள் ,வெளிநாட்டு கரன்சிகள், பழங்கால மரம், தாமிரம், இரும்பான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி ஏற்பாட்டாளர் சண்முகம் கூறியதாவது: தற்போது பிட் காயின், டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆகியவை நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் நாணயம் பயன்பாடு குறைந்து வருகிறது.
இன்னும் 10 ஆண்டுகளில் நாணயம் பயன்பாடு அழிந்துவிடும். வரும் தலைமுறைகளிடம் நாணயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல்லில் முதல் முறையாக தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாணயத்தின் மதிப்பினை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
மியூசியம் சென்று பார்க்க வேண்டிய அரிய நாணயங்கள், பழங்கால பொருட்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.