/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிழற்கூரை வசதி இல்லை முருக பக்தர்கள் அவதி
/
நிழற்கூரை வசதி இல்லை முருக பக்தர்கள் அவதி
ADDED : டிச 30, 2025 07:39 AM

எரியோடு: எரியோட்டில் பாதயாத்திரை செல்வோருக்கான தங்குமிடம், நிழற்கூரை அமைக்காததால் பழநி முருக பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் மார்கழி துவக்கத்தில் இருந்தே பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவர்.
பக்தர்கள் அய்யலுார், வடமதுரை வழிகளில் எரியோடு வந்து பின்னர் வேடசந்துார், ஒட்டன்சத்திரம் வழியே பழநி சென்றடைவர்.
இவர்கள் ஆங்காங்கே தங்கி ஓய்வெடுக்க வசதியாக பழநி தேவஸ்தானம் சார்பில் விழா கால தங்குமிட நிழற்கூரைகள் அமைக்கப்படும். இவற்றுள் ஒன்று எரியோடு நால்ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வந்தது.
இங்கு தங்கி பகல் நேர வெயில், இரவு நேர பனி சிரமங்களை பக்தர்கள் ஓரளவிற்கு குறைத்து கொள்ள முடிந்தது.
தற்போது இப்பகுதியில் நிழற்கூரை அமைக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எரியோட்டில் ஓய்வெடுக்க இடமின்றி சிரமப்படுகின்றனர்.
சிலர் வீடு, கடை வாசல்களில் சிறிது நேரம் உட்கார்ந்து செல்ல மட்டுமே முடிகிறது. இதே பகுதியில் நிழற்கூரை அமைக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

