/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்களை பழிவாங்குவதற்காக அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி அமைச்சர் பெரியசாமி குற்றச்சாட்டு

ADDED : டிச 27, 2025 04:33 AM
சின்னாளபட்டி: ''தமிழக மக்களை பழிவாங்குவதற்காக அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி அமைந்துள்ளது,'' என, திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஒன்றியம் ஆலமரத்துபட்டி அருகே கலிக்கம்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் பெரியசாமி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது : முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.,வும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக மக்களை பழி வாங்கும் நோக்குடன் செயல்படுகின்றன.
வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றியது மட்டுமின்றி, வேலை நாட்களையும் குறைத்துள்ளனர். தமிழகத்தின் 12,253 கிராம ஊராட்சிகளில் காங்., ஆட்சியின் போது ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி, வேலை உறுதித்திட்ட பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் பின் வந்த பா.ஜ., ஆட்சியில் ரூ.65 ஆயிரம் கோடி, ரூ.42 ஆயிரம் கோடி, தற்போது ரூ. 16 கோடி என, வெகுவாக நிதி ஒதுக்கீட்டை குறைத்து விட்டனர்.
வரும் காலங்களில் 10க்கு 2 பேருக்கு தான் வேலை வழங்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். ஊழல் வழக்கு பதிய கூடாது என்பதற்காக பழனிசாமி பாஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளார். எங்களுக்கு அந்த கவலை இல்லை. எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் கொள்கையில் என்றும் மாறாமல் அடித்தட்டு நிலை மக்களுக்கும் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு பேசினார்.