/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 10, 2025 06:15 AM

வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் கும்பாபிேஷக விழா ஏப்.7ல் மகா கணபதி பூஜையுடன் துவங்கியது. விழாவில் 4 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் பிரசன்ன வெங்கடேஷ், கரூர் மகாதானபுரம் காந்திகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், துணைத் தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் பத்மலதா, கவுன்சிலர்கள் மருதாம்பாள், சகுந்தலா, சுப்பிரமணி, தி.மு.க., நகர செயலாளர் கணேசன், பொருளாளர் முரளிராஜன், காங்., வட்டார தலைவர் ராஜரத்தினம், கோயில் தக்கார் சீனிவாசன், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் பங்கேற்றனர்.

