/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரங்களுக்கு அமிலம் ஊற்றியவர் கைது
/
மரங்களுக்கு அமிலம் ஊற்றியவர் கைது
ADDED : ஏப் 18, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே உள்ள அரசன்கொடையில் விவசாய நிலத்திற்கு அருகே உள்ள வனப்பகுதி மரங்களை பட்டுப் போக செய்வதற்காக அமிலம் ஊற்றியவரை பெரும்பள்ளம் வனத் துறையினர் கைது செய்தனர்.
சின்ன கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கரியமால் 50.இவருக்கு அரசன் கொடையில் விவசாய நிலம் உள்ள நிலையில் அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களால் விவசாயத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 20 யூகாலிப்டஸ் மரங்களின் துார்களில் அமிலம் ஊற்றி மரங்களை காய வைத்துள்ளார். கரியமாலை கைது செய்த பெரும்பள்ளம் வனத்துறை ரேஞ்சர் குமரேசன் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தார்.

