/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கன்னிவாடியில் விலை உயர துவங்கிய மக்காச்சோளம்
/
கன்னிவாடியில் விலை உயர துவங்கிய மக்காச்சோளம்
ADDED : பிப் 19, 2024 05:54 AM
ரெட்டியார்சத்திரம், : ரெட்டியார்சத்திரம் கன்னிவாடி பகுதியில் மக்காச்சோளம் கொள்முதல் விலை உயர துவங்கியுள்ளதால் வியாபாரிகள்மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரெட்டியார்சத்திரம் கன்னிவாடி பகுதியில், சில ஆண்டுகளாக போதிய மழையின்மை தண்ணீர் பற்றாக்குறை, கொளுத்தும் வெயில் என விவசாயிகள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டனர். காய்கறி, பூ, பயறு வகை சாகுபடியை தவிர்த்து மக்காச்சோளத்திற்கு மாறினர்.
3 ஆண்டுகளாகபடைப்புழு, வறட்சி பிரச்னைகளால் வேளாண் பணியில் ஏமாற்றம் தொடர்ந்தது.
கடந்தாண்டு பால் பிடிக்கும் பருவத்தில் பெய்த மழை விளைநிலத்தில் தேங்கிய நீர் போன்றவற்றால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்தாண்டு மக்காச்சோளம் ரூ.2100க்கு கூடுதலாக விலை உயரத்துவங்கி உள்ளது.
விற்பனை சேமிப்பிற்காக கொள்முதல் செய்வதில் வியாபாரிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
முத்தனம்பட்டி விவசாயி முருகேசன் கூறுகையில்,வடமாநிலங்களில் மக்காச்சோளம் உற்பத்தி பாதிப்பால் கடந்தாண்டுமகசூல் குறைந்த போதும் ஓரளவு விலைகிடைத்தது.
தற்போது கடந்த வாரத்தை விட தலா ஒரு மூடைக்கு ரூ.300 வரை அதிகரித்தது. விரைவில் ரூ.2300ஐ கடக்க வாய்ப்புள்ளது.
வியாபாரிகளால் மட்டுமே சேமிக்க முடியும் என்றார்.

