/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி ராஜகோபுரத்தில் இலகு கும்பாபிஷேகம்
/
பழநி ராஜகோபுரத்தில் இலகு கும்பாபிஷேகம்
ADDED : அக் 24, 2024 09:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி,:பழநி முருகன் கோவில் கும்பாபிஷேகம், 2023, ஜன., 27ல் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன், ராஜகோபுரத்தின் வலதுபுற சுதை சிற்பமான, 'டகோரம்' சேதமடைந்தது. சாரம் அமைத்து, டகோரம் புனரமைப்பு செய்யப்பட்டது. பணிகள் முடிந்து, இலகு கும்பாபிஷேகம் நடந்தது.
யாக பூஜைகள் நடத்தி, புனித நீர் கோவில் உட்பிரகாரத்திலிருந்து எடுத்து வரப்பட்டு, அதிகாலை, 5:40 மணிக்கு அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் தலைமையில், இலகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர், உற்ஸவருக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து, பக்தர்கள் கலந்து கொண்டனர்.

