/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 09, 2025 04:32 AM

சாணார்பட்டி: வி.மேட்டுப்பட்டி வரம் தரும் விநாயகர்,குலம் காக்கும் காளியம்மன், அருள் முருகன், கருப்பண்ணசுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள், முளைப்பாரி ஊர்வலமாக கோயில் முன் அமைக்கப்பட்ட யாக சாலைக்கு அழைத்து வரப்பட்டது.
ஸ்ரீ கதிர் சிங்கப்பெருமாள் சன்னதியில் இருந்து ஸ்ரீ குலம் காக்கும் காளியம்மனுக்கு அண்ணன் சீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பஜை யுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
மூன்று கால யாக சாலை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றிற்கு மேற்பட்ட கருடர்கள் வானத்தில் வட்டமிட அதை கண்ட பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.