/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் சுயேச்சை வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு
/
திண்டுக்கல்லில் சுயேச்சை வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு
திண்டுக்கல்லில் சுயேச்சை வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு
திண்டுக்கல்லில் சுயேச்சை வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு
ADDED : ஏப் 14, 2024 04:42 PM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோதிர சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் தன் அலுவலகத்தின் முன் நிறுத்திய கார் கண்ணாடியை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்தனர். போலீசார் சி.சி.டி.வி.,காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் குள்ளனம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்50. இவர் பல ஆண்டுகளாக சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இந்நிலையில் ஆறுமுகம் தற்போது நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அதற்காக தன் ஆதரவாளர்களுடன் தினமும் திண்டுக்கல் தொகுதி முழுவதும் துண்டு பிரசுரங்கள் வழங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து ஆறுமுகம் நேற்று முன்தினம் தன் ஆதரவாளர்களுடன் தனது காரில் சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்தார். இரவு 7:15 மணிக்கு தன் காரை அலுவலகம் முன் நிறுத்தி விட்டு வேறு ஒரு காரில் ஏறி வீட்டிற்கு சென்றார். இன்று காலை மீண்டும் ஆறுமுகம்,அலுவலகத்திற்கு வந்தபோது தன் காரின் முன் பக்க கண்ணாடி உடைந்திருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து அங்குள்ள சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் கார் கண்ணாடியை உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. போலீசார் அந்த வாலிபர்கள் யார் என விசாரிக்கின்றனர்.

