/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புகார் மீது முறையற்ற விசாரணை: இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்,டிரைவர் சஸ்பெண்ட்

ADDED : செப் 06, 2024 06:01 PM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் புகார் கொடுக்க வந்த விவசாயி புகாரை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர், வீடியோ எடுத்தவரை தாக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் எம்.எம். கோவிலுாரை சேர்ந்த விவசாயி முகமது நசுருதீன். இவர் திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப்பிடம் தன்னுடைய 2 மாடுகள் காணாமல் போனதாகவும் அதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவும் மனு கொடுத்தார். இந்தமனு தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் செப்.5 ல் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மாடு காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில் முகமது நசுருதீன், அவரது மகன் முகமது உசேன் ஆகியோரை விசாரணை செய்தார். விசாரணையை முகமது உசேன், தனது அலைபேசியில் வீடியோவாக எடுத்தார். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று கூறி அவருடைய அலைபேசியை பறிக்க முயன்றபோது, இன்ஸ்பெக்டரின் டிரைவர் போலீஸ்காரர் உபைது ரஹ்மான், முகமது உசேனை தாக்கினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலானது. எஸ்.பி.,பிரதீப் இதுதொடர்பாக விசாரணை நடத்தி போலீஸ்காரர் உபைது ரஹ்மானை சஸ்பெண்ட் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனை,இந்த சம்பவத்தை தடுக்க தவறியதாலும்,முறையற்ற வகையில் நடந்து கொண்டதாக கூறி பணியிட மாற்றம் செய்தார்.