/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., ஆட்சியில் கோயில்கள் புதுப்பொலிவு அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
/
தி.மு.க., ஆட்சியில் கோயில்கள் புதுப்பொலிவு அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
தி.மு.க., ஆட்சியில் கோயில்கள் புதுப்பொலிவு அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
தி.மு.க., ஆட்சியில் கோயில்கள் புதுப்பொலிவு அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
ADDED : மார் 14, 2024 04:39 AM
சின்னாளபட்டி: '' தி.மு.க., ஆட்சியில் ஹிந்து அறநிலையத்துறை கோயில்கள் புதுப்பொலிவு பெற்று வருவதாக''அமைச்சர் ஐ .பெரியசாமி பேசினார்.
சின்னாளபட்டி 4வது வார்டு குறை கேட்பு முகாமிற்கு வந்திருந்த அமைச்சர் ஐ. பெரியசாமி, கீழக்கோட்டை மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு நிர்வாகிகள் கோயில் பராமரிப்பு குறித்து கோரிக்கை வைத்தனர். சித்திரை திருவிழாவிற்கான பூப்பல்லக்கு, மழைக்காலங்களில் பாதுகாப்பதற்கு ஏற்ப கூரை, பேவர் பிளாக் ரோடு வசதி கோரினர்.
இவற்றிற்கு நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்த அமைச்சர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஹிந்து அறநிலையத்துறை மூலம் ஏராளமான கோயில்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகின்றன. பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள், அன்னதானம் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆத்துார் தொகுதியில் 30 ஆண்டுகளாக ஏராளமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம், சீரமைப்பு, ரோடு, குடிநீர் வசதி போன்ற நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், நிர்வாகி அம்பாத்துறை ரவி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன், பேரூராட்சி தலைவர் பிரதீபா பங்கேற்றனர்.

