/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தென்னை மரங்களில் வெள்ளைப்பூச்சி தாக்குதலால் பாதிப்பு! கட்டுப்படுத்த தேவை தோட்டக்கலையின் அறிவுரை

UPDATED : டிச 13, 2025 08:08 AM
ADDED : டிச 13, 2025 05:51 AM

வேடசந்துார், புதுரோடு, நாகைய கோட்டை, வெல்லம்பட்டி, கோவிலுார் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
100 நாள் வேலைத் திட்டம் போன்ற காரணங்களால் தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை மறந்து தென்னை, மா உள்ளிட்ட மாற்று பயிர் விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தென்னை விவசாயிகளுக்கு சில மாதங்களாக வெள்ளை நிற பூச்சிகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னை மட்டைகளின் பின்பகுதியில் கூட்டமாக வெள்ளை நிறத்தில் பாசி போல் படர்ந்து இருக்கும் இந்த பூச்சிகள் மட்டைகளை தின்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனிதர்களை தாக்கிய குஷ்டம் நோய் பாதிப்பை போல் தற்போது தென்னை மரத்தை தாக்கும் இந்த நோயால் மட்டைகள் அரை மட்டைகளாக மாறி வருகின்றன.
காய்கள் காய்க்கும் தென்னை மரத்தில் இந்த பூச்சிகளின் தாக்குதல்களால் தேங்காய்களே சிறுத்து குறும்பைகளை போல் காட்சியளிக்கின்றன. மாவட்ட தோட்டக்கலைத்துறை நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளை நேரடியாக சந்தித்து தென்னை விவசாயத்திற்கான பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும், அதற்கான தீர்வு காணவும் முன் வரவேண்டும்.