sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பயன்பாடின்றி வீணாகிறது சுகாதாரவளாகம்

/

 பயன்பாடின்றி வீணாகிறது சுகாதாரவளாகம்

 பயன்பாடின்றி வீணாகிறது சுகாதாரவளாகம்

 பயன்பாடின்றி வீணாகிறது சுகாதாரவளாகம்


ADDED : டிச 26, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமான மின் கம்பம்

குஜிலியம்பாறை ஒன்றியம் புளியம்பட்டியில் இருந்து பில்லமாநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் மாதா கோயில் அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்துள்ளது . எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. ஆர். நல்லுசாமி , குஜிலியம்பாறை.

........----------

எந்நேரமும் எரியும் விளக்குகள்

ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டில் அரசப்பபிள்ளை பட்டி பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்தில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு பகல் நேரத்தில் எரிந்து கொண்டே

உள்ளது. இதனால் மின்சாரம் வீணாகிறது. பெரியசாமி, அரசப்பபிள்ளைபட்டி.

.........----------தெருவில் தேங்கும் கழிவுநீர்

திண்டுக்கல் சத்திரம் தெருவில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி ரோட்டோரத்தில் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது . சில நேரம் கழிவு நீர் நிறைந்து ரோட்டில் செல்கிறது. . பழனிச்சாமி, திண்டுக்கல்.

...........----------

சேதமான தரைப்பாலம்

திண்டுக்கல் அனுமந்தநகரில் சாக்கடை தரை பாலம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் விபத்துக்கள் நடக்கிறது .

பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகேந்திரன், திண்டுக்கல்.

........----------ரோட்டோரங்களில் ஓட்டல் கழிவு

பழநி - பாலசமுத்திரம் ரோடு மயிலாடும் நகர் மேற்கு பகுதி ரோட்டோரத்தில் இரவு நேரங்களில் ஓட்டல் கழிவுகளை கொட்டுகின்றனர் .பிளாஸ்டிக் கலந்த குப்பை

குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது . ராகவன் , பழநி.

.............----------

வீணாகும் குடிநீர்

பழநி பழைய ஆர்.டி.ஓ ஆபீஸ் பஸ் ஸ்டாப் அருகே குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாக செல்கிறது. குடிநீர் பற்றாக்குறை சூழல் ஏற்பட்டுள்ளதால் சீரமைக்க வேண்டும் . வேண்டும்.ஜின்னா, பழநி.

...........----------நடவடிக்கை எடுக்கலாம்

வடமதுரை சிங்காரக் கோட்டையில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி கிடக்கிறது. தண்ணீர் வசதி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். --சுப்பிரமணி, காணப்பாடி.

........






      Dinamalar
      Follow us