/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிலத்தை அபகரிக்குறாங்க... வீட்டை மீட்டுதாங்க... குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
/
நிலத்தை அபகரிக்குறாங்க... வீட்டை மீட்டுதாங்க... குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
நிலத்தை அபகரிக்குறாங்க... வீட்டை மீட்டுதாங்க... குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
நிலத்தை அபகரிக்குறாங்க... வீட்டை மீட்டுதாங்க... குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ADDED : அக் 15, 2024 05:50 AM
திண்டுக்கல்: அரை நிர்வாண கோலத்தில் பூசாரிகள், சொத்துக்காக பெற்றோரை விரட்டிய மகன்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பலர் தங்கள் பிரச்னைகளை மனுக்களாக எழுதி வந்து முறையிட்டனர்.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 172 மனுக்கள் பெறப்பட்டது. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, உதவி ஆணையாளர் (கலால்) பால்பாண்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளி இருவருக்கு தலா ரூ.9500 மதிப்பிலான காதொலிகருவிகள் வழங்கப்பட்டது.
பழைய கன்னிவாடி மொட்டு கோம்பையைச் சேர்ந்த பொதுமக்களுடன் பூசாரிகள் 2 பேர் அரை நிர்வாண கோலத்தில் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள கோயில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்தனர்.
அங்குள்ள மரங்களையும் வெட்டி அகற்றுகின்றனர். பொதுமக்களை அந்த வழியாக செல்ல விடாமல் தடுக்கும் வகையில் மண்ணால் தடுப்பு ஏற்படுத்தினர். எனவே, ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து கோயில் நிலத்தை மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்குறிப்பிட்டனர்.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த வெங்காய வியாபாரி சவடமுத்து 67. இவர் மனைவி சின்னம்மாளுடன் கொடுத்த மனுவில், எனது மனைவி பெயரில் உள்ள வீட்டை எனது மகன், மருமகள் ஆகியோர் ஏமாற்றி அபகரித்தனர்.
எங்களுக்கு அடிப்படை தேவைகளை கூட செய்து கொடுப்பதில்லை.
எனவே முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எங்கள் வீட்டை திரும்ப பெற்றுத்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்குறிப்பிட்டனர்.
குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், குடனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். வேடசந்துார் மின்வாரிய கோட்ட அலுவலம் திறக்கப்பட்டும் செயல்படாமல் உள்ளது.
மண், கிராவல், கனிமவளம் கொள்ளை உள்பட பல்வேறு கோரிக்கைகளை துணை முதல்வர் உதயநிதியிடம் சந்தித்து நேரில் மனுவாக அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.

