ADDED : டிச 25, 2024 03:09 AM
சின்னாளபட்டி:காந்திகிராம பல்கலை சார்பில் யு.ஜி.சி., நெட் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது.
பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை: காந்திகிராம பல்கலை சார்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களுக்கான பல்கலை மானிய குழுவின் இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை, உதவி பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்விற்கு நேரடி பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. ஜன. 2ல் துவங்கி முதல், இரண்டாம் தாள் என 5 நாட்கள் வகுப்புகள் நடக்கும். காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தமிழ்த்துறை பேராசிரியர் பா. ஆனந்தகுமாரிடம் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 83002 00799ல் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

