/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ரவுடி மீது துப்பாக்கி சூடு
/
திண்டுக்கல்லில் ரவுடி மீது துப்பாக்கி சூடு
ADDED : அக் 04, 2024 11:33 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த முகமது இர்பான், 24, என்பவரை பழிக்குப் பழியாக செப்.28ல் சிலர் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் வடக்கு போலீசார் முத்தழகு பட்டியை சேர்ந்த ரவுடி ரிச்சர்டு சச்சின் உட்பட நால்வரை கைது செய்தனர். நேற்று காலை திண்டுக்கல் மாலைப்பட்டி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுப்பதற்காக வடக்கு போலீசார் ரவுடி ரிச்சர்டை காரில் அழைத்து வந்தனர்.
அப்போது மாலைப்பட்டி அருகே வந்தபோது ரவுடி ரிச்சர்ட் சச்சின் அருகில் இருந்த காவலரை கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ரவுடி ரிச்சர்ட் சச்சின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். காயமடைந்த போலீசார், ரவுடி இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

