/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு திருப்பலி
/
சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு திருப்பலி
ADDED : ஜன 02, 2024 06:02 AM

திண்டுக்கல்: ஆங்கில புத்தாண்டையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
திண்டுக்கல் மணிகூண்டில் உள்ள துாய வளனார் சர்ச், மேட்டுப்பட்டி வியாகுல மாதா சர்ச், குமரன் திருநகர் ஆரோக்கியமாதா சர்ச், என்.ஜி.ஓ.காலனி ஆரோக்கிய அன்னை சர்ச், மாரம்பாடி அந்தோணியார் சர்ச், மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
முத்தழகு பட்டி, தோமையார்புரம், சவேரியார் பாளையம், வேடபட்டி, ரவுண்ட் ரோடு, சி.எஸ்.ஐ. சர்ச்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.
இதேபோல் சுற்று கிராமங்களான ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், வக்கம்பட்டி, கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எம்.அம்மாபட்டி, உள்ளிட்ட இடங்களில் உள்ள சர்ச்களில் அந்தந்த பங்கின் தலைமை பாதிரியார்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
நவீன இசை கருவிகள் மூலம் பக்தி பாடல்கள் இசை முழங்க புத்தாண்டு பிறப்பையொட்டி ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி வாழ்த்து பரிமாறி கொண்டனர். மின்னொளியில் சர்ச்கள் ஜொலித்தன.
* கன்னிவாடி பகுதி கிறிஸ்தவ சர்ச் களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டங்கள் நடந்தது. ம சர்ச் வளாகங்கள், மரங்கள் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
குட்டத்துப்பட்டி புனித அந்தோணியார் சர்ச்சில் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
பாதிரியார் சார்லஸ் பிரவீன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தன. ஏராளமானோர் வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்.
*கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச்சில் பாதிரியார் நெப்போலியன் விழா திருப்பலி நிறைவேற்றினார்.
ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், வக்கம்பட்டி, கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எம்.அம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில், சர்ச் மட்டுமன்றி, வீடுகளும் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரித்து கொண்டாடினர்.
* ஒட்டன்சத்திரம், தும்மிச்சம்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம் பகுதி கிறிஸ்தவ சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
நள்ளிரவு சர்ச்சு களுக்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
பல இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
*வடமதுரை சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
போதகர் பெஞ்சமின் தலைமையில் ஆராதனை, சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திருமண்டல மாமன்ற உறுப்பினர் டேவிட், குருசேகர உறுப்பினர் சாந்திஅருள், மோசஸ் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
திருச்சபை மக்கள் பங்கேற்றனர். அய்யலுார் பகுதி சர்ச்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

